தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் 500-ஐ நெருங்கியுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை 498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் 500-ஐ நெருங்கியுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை 498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நோய்ப் பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 106 பேருக்கும், கோவையில் 48 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,995-ஆக உள்ளது. 429 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,34,277-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...