நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழக வளர்ச்சிக்கு உதவுபவர்கள் அனைவரும் முதல்வர்களே: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :19 செப்டம்பர் 2022, 2:58 pm

DIN


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஆட்சியர்களின் சாதனை.  மாற்றுத்திறனாளிகள் நலத்துயரை முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்ணும், கருத்துமாக கவனித்தார்.

சொல் புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் செயல்பட்ட அதிமுக ஆட்சி போன்றதல்ல திமுக ஆட்சி. திமுக ஆட்சிக்கு செயல்வடிவம் பெறுகின்ற ஆலோசனையை கூறுபவர்கள் அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியை நடத்துகிறோம். திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியல்ல, மாறாக இது ஒரு இனத்தின் ஆட்சியாக உள்ளது.

திமுக ஆட்சி மீது இட்டுக்கட்டிய அவதூறுகளை பரப்ப நினைக்கின்றனர். சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல,  தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறுபவர்கள் அனைவருமே முதல்வர்கள்தான் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.