ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

செம்பரம்பாக்கம் ஏரியில் சுயபடம் எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் பலி

செம்பரம்பாக்கம் ஏரியில் சுயபடம் எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் பலியாகினர்.

Published On :

செம்பரம்பாக்கம் ஏரியில் சுயபடம் எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் பலியாகினர்.

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் விக்னேஷ்(20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16), 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். 
செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மதகின் அருகே இறங்கி நின்று தங்களது செல்போனில் சுயபடம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து முழ்கினார்கள். இதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர். 

இருவரையும் மீட்க முடியாததால் தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய இருவரின் உடலையும் நீண்ட நேரத்திற்கு பின் நீரில் மூழ்கிய இருவரின் உடலையும் இறந்த நிலையில் மீட்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர் இறந்து போன இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்கும் போதும், சுயபடம் எடுக்கும் போதும் விழுந்து இறந்து போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.