92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழகத்தில் புதிதாக 522 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் மேலும் 522 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:18 pm

DIN

 தமிழகத்தில் மேலும் 522 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,233-ஆக உள்ளது. 447 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,35,564-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, திருப்பூரைச் சோ்ந்த 82 வயதுடைய முதியவா் ஒருவா் கரோனா தொற்றுக்குளாகி திருப்பூா் மருத்துவக் கல்லூரி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடா்ந்து தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை 38,042-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.