ஆந்திரம், தெலங்கானா பயங்கரவாத பயிற்சி அமைப்புகளுடன் தொடர்பு: கம்பத்தில் ஒருவர் கைது

தேசிய புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வழக்கில் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பயிற்சி மற்றும் தொடர்புடையதாக யாசர் அராபத் (38) என்பவரை கைது செய்தனர்.
யாசர் அராபத்தை விடுதலை செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர்.
யாசர் அராபத்தை விடுதலை செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தேசிய புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வழக்கில் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பயிற்சி மற்றும் தொடர்புடையதாக யாசர் அராபத் (38) என்பவரை வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர். இதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாழக்கிழமை தமிழ்நாட்டில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை நடத்தினர், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் குண்டு வெடிப்பு மற்றும் அதன் தொடர்புடைய தீவிரவாத பயிற்சி பெறும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தமிழகத்திலும் இருப்பதாக தெரியவந்தது.

அதன்பேரில் தேனி மாவட்டம் கம்பம் தாதத்தப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த யாசர் அராபத் (38) என்பவர் வீட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை என்ஐஏ கண்காணிப்பாளர் சுனில் குமார் தலைமையில் போலீசார் சென்றனர். இவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மதுரை மண்டல  நிர்வாகியாக உள்ளார். 

யாசர் அராபத்தை விடுதலை செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இஸ்லாமிய அமைப்பினர்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யாசர் அராபத்தை எழுப்பி விசாரணை நடத்தி, வீட்டில் சோதனை செய்தனர், அதில் கணினியில் இருந்த மென்பொருளான  ஹார்டு டிஸ்க், 6 பென் டிரைவர்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அறிக்கைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை கைப்பற்றி அழைத்துச் சென்றனர்.

போராட்டம்
தகவல் கேள்விப்பட்டதும், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையம் முன்பு கூடினர், தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி, யாசர் அராபத்தை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டனர். உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், அவர்கள் மறுக்கவே 41 பேர்களை கைது செய்து காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:  தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் முத்துதேவன்பட்டியில் உள்ள அறிவகம் எனப்படும் இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்திலும் சோதனை நடத்தி கணினி மென்பொருள் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், செல்போன்கள், அறிக்கை மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com