சேலம்: ஓமலூர் அருகே தொடர்ந்து மூன்றாவது முறையாக பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை மூன்றாவது முறையாக காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குச் சென்ற போது கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ஆய்வாளர் இந்திரா வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டார். பிரகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஏற்கெனவே இதே மாணவியை கடத்திச் சென்ற வழக்கில், இரண்டு முறைபோக்சோவில் கைது செய்யப்பட்டு பிரகாஷ் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.