கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை!

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 செப்டம்பர் 2022, 8:06 am

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 24ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  ரயிலில் பட்டாசுபோன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. 


இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்து வருகிறது. விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து,  இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல், பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.