ஆம்பூர்: காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் தனியார் (பரிதா) காலணி தொழிற்சாலை  செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில்  திடீரென ஏற்பட்ட  தீ விபத்தால் தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் வாணியம்பாடி பேரணாம்பட்டு குடியாத்தம் ஆலங்காயம் நாட்றம்பள்ளி  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ விபத்தால் சுமார் 5 கோடி மதிப்பிலான காலணி மற்றும் தோல் உதிரிபாகங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.  தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த  ரசாயனப் பொருட்களும் தீயில் எரிந்ததால்  புகை மூட்டத்துடன் காணப்பட்டதால் கிராம மக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பரீதா குழுமத்திற்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட காலணி மற்றும் தோல்  தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com