ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்: காந்தி ஜெயந்தி தினத்தில் கதா் துறை விற்பனை இலக்கு
ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி, கைத்தறிப் பொருள்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி, கைத்தறிப் பொருள்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான புதிய திட்டமும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெட் பல்கலைக்கழகத்துடன், தமிழ்நாடு காதி மற்றும் கைத்தறித் துறை இணைகிறது. காந்தி ஜெயந்தி தினத்தன்று, அமெட் பல்கலைக்கழகத்தின் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலா்கள் இணைந்து கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக காதி, கைத்தறிப் பொருள்களை விற்பனை செய்யவுள்ளனா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாக கைத்தறி, கதா்த் துறையின் பொருள்களை விற்கும் திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைக்கவுள்ளாா். 4 ஆயிரம் மாணவா்களைக் கொண்டு ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி பொருள்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...