மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2210 கன அடியாக சரித்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2210 கன அடியாக சரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த லேசான மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை வினாடிக்கு  2,360 கன அடியாக இருந்து நீர்வரத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2210 கன அடியாக குறைந்துள்ளது. 

நீர்மட்டம்: வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 105.20  அடியாக உயர்ந்துள்ளது .

வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

நீர் இருப்பு: அணையின் நீர் இருப்பு 71.74 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com