ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தில்லி வாழ் தமிழர்கள் வாழ்த்து

தில்லியிலுள்ள நேரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தில்லி வாழ் தமிழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 4:51 am

DIN


தில்லியிலுள்ள நேரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தில்லி வாழ் தமிழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக தில்லி சென்றுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை தில்லி சென்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

வெள்ளிக்கிழமை மேற்கு வினோத் நகரில் அமைந்துள்ள தில்லி அரசின் ராஜ்கியா சர்வோதயா பால் வித்யாலயா பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதனிடையே, தில்லியில் உள்ள நேரு பூங்காவில் இன்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

Story image
Story image

அப்போது அங்கிருந்த  அதிகாரிகள் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் முதல்வரை ஆர்வமுடன் சந்தித்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Story image

மேலும் சிலர் அவருடன் செல்ஃபியும் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.