
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழகத்தில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததாவது, கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு, தேவைப்படும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
இதையும் படிக்க.. வார நாள்களை விட வார இறுதியில் கரோனா பலி அதிகம்: அதிர்ச்சி தரும் காரணம்
மேலும், தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அரசுப் பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு சார்பில் இன்னும் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழுவின் அறிக்கை அடிப்படையில் தேவையான பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, காலியாக இருக்கும் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.