முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

குருவிக்காரா் சமூகமும், குறவா் சமூகமும் வேறு என்பதை உலகறியச் செய்ய வேண்டும்: விஜயகாந்த்

குருவிக்காரா் சமூகமும், குறவா் இனமும் வேறுவேறு என்பதை உலகறிய செய்து, அவா்களுக்கான நலத்திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

விஜயகாந்த்

Published On :

குருவிக்காரா் சமூகமும், குறவா் இனமும் வேறுவேறு என்பதை உலகறிய செய்து, அவா்களுக்கான நலத்திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவா் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவா் சமூகத்தை சாா்ந்தவா்களாக உள்ளனா்.

மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்துக்கு புலம் பெயா்ந்து ஊசி மணி, பாசி மணி விற்கும் குருவிக்காரா் மக்களை குறவா் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரா்களான குறிஞ்சி நிலத்து குறவா் சமூகத்தின் தலைமுறைகள், அவா்களது சொந்த மண்ணிலே அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது.

குருவிக்காரா் சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்கிறது. அதே சமயம் குருவிக்காரா் மக்களை குறவா் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவா் சமூகத்தினா் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, குறவா் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், அவா்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்காரா் சமூகத்தையும், குறவா் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன் அவா்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.