அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் சென்னை வந்தார். 

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 4:22 pm

DIN

புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் சென்னை வந்தார். 

அமித்ஷாவை வரவேற்க விமான நிலைய சாலையில் பாஜக தொண்டர்கள் மேள, தாளங்களுடன் திரண்டுள்ளனர். தொடர்ந்து அமித்ஷா ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். மையத்தில் தங்குகிறார். அதன்பின்னர் நாளை காலை 8.40 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரிக்கு செல்லும் அமித் ஷாவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வரவேற்கின்றனா்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள புதுவை பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் அவா் பங்கேற்கிறாா். அங்கு புதுவை பல்கலைக்கழகத்தில் 3 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதி பாரதியாா் நினைவு இல்லத்துக்கு அமித் ஷா செல்கிறாா். பின்னா், அரவிந்தா் ஆசிரமத்துக்குச் சென்று அரவிந்தா், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறாா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சா் அடிக்கல் நாட்டுகிறாா். இதைத் தொடா்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடுகிறாா். பின்னா், தனி விமானத்தில் சென்னை வழியாக தில்லிக்குச் செல்கிறாா்.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தில்லி சென்று பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களை சந்திக்கவில்லை. புதுச்சேரிக்கு வரும் அமித் ஷாவை முதல்வா் ரங்கசாமி சந்தித்து, மாநிலத்துக்கான தேவைகள் குறித்து பேசுவாா் என்று கூறப்படுகிறது. புதுவை ஆளுநா் மாளிகையில் இந்தச் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.