கம்பத்தில் பிஎல்ஏ இயற்கை விவசாய காய்கனிகள் விற்பனை தொடக்கம்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி சாலையில் பி.எல்.ஏ.காய்கறி சந்தையில் இயற்கை முறையான காய்கனி விற்பனை தொடக்க  விழா புதன்கிழமை நடைபெற்றது. 
கம்பத்தில் பிஎல்ஏ இயற்கை விவசாய காய்கனிகள் விற்பனை தொடக்கம்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி சாலையில் பி.எல்.ஏ.காய்கறி சந்தையில் இயற்கை முறையான காய்கனி விற்பனை தொடக்க  விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார், தி.மு.க.தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், விவசாய சங்கத்தலைவர் ஓ.ஆர்.நாராயணன் முன்னிலை வகித்தனர். 

பால முத்தழகு, பெஸ்ட் மணி கோல்டு குழுமத்தின் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, பரமேஸ்வரி ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

காய்கறி சந்தையை கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.ஆர்.ராமசந்திரன் விற்பனையை தொடங்கி வைத்தார்.

விழாவில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன், தி.மு.க.மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரா.பாண்டியன், பி.எம்.ஜி.போட் ஹவுஸ் நிர்வாக இயக்குனர் சுப்பையா, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கூடல் சி.செல்வேந்திரன், நகர செயலாளர் எல்.ஆர்.சுப்பிரமணியன், பாலமுத்தழகு,பெஸ்ட் மணி கோல்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது,

மாவட்ட அளவில் முதன்முதலாக காய்கறி சந்தை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான காய்கனிகளை விவசாயிகள் மதுரை மார்க்கெட் விலைக்கு இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வந்து விற்பனை செய்யலாம். 

இதே போல பெரிய மற்றும் சிறிய வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம். 

அண்டை மாநிலமான கேரளாவுக்கும் தினந்தோறும் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவசாயிகள் உரம் பூச்சி மருந்து உள்ளிட்ட மருந்து வகைகளும் இங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com