கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: பாதுகாப்பாக வெளியேறிய கிராம மக்கள்!

சீர்காழி அடுத்த கொள்ளிடம் திட்டுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கன அடி உபரி நீர் தற்பொழுது வந்து சென்று கொண்டிருக்கிறது. படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

கொள்ளிடம் திட்டுப் பகுதி கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்கள்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

மேலும், கைக் குழந்தை, கர்ப்பிணிகளை பாதுகாப்பான இடத்திற்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com