இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.   
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.   

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற,500ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயில் மாரியம்மனுக்கு தமிழ் மாதங்களில் மார்கழி, தை, ஆடி ஆகிய மாதங்கள் விஷேச மாதங்களாக கருதப்படுகிறது. 

இதில், ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் தீபாரதனைகளும் நடைபெற்றன.

இத்திருவிழாவிற்க்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடிக்கு வந்து, பொங்கல் வைத்து, அக்னிசட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நோ்த்திக்கடன்களை பக்தர்கள் மாரியம்மனுக்கு செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க | கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை நிறுத்தம்: எம்எல்ஏ கண்டனம்

ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிகடைசி வெள்ளித் திருவிழா வரும் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. 12 ஆம் தேதி நடைபெறும் திருவிழாவில் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடைபெறும். 

மேலும், இந்த ஆடித்திருவிழாவிற்காக தென்பகுதியான தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, சங்கரன்கோவில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டன.  

இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி, தங்கும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

இந்த கொடியோற்ற நிகழ்ச்சியின் போது இருக்கன்குடி கோயில் ஆணையாளர் கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி உள்ளிட்ட பரம்பரை பூசாரிகள், கே.மேட்டுபட்டி, என்.மேட்டுபட்டி, நத்தத்துபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட பகுதி முக்கிய பிரமுகர்களும், கிராம பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்ற இத்திருவிழா இந்த ஆண்டு ஏராளமான பக்தர்களுடன் கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com