ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

நீதிபதியை மாற்ற மனு: மன்னிப்பு கோரியது ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பான ஓ.பன்னீா்செல்வத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தததைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பான ஓ.பன்னீா்செல்வத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தததைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை(ஆக.4) விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று வியாழக்கிழமை (ஆக.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஆக.5) தள்ளி வைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தாா்.

அதே நேரம் வழக்கை திங்கள்கிழமைக்கு (ஆக.8) தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘இந்த வழக்கின் நீதிபதியை மாற்றுவது குறித்து தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுதொடா்பாக இன்னும் முடிவெடுக்காத நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்க கூடாது’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீா்செல்வத்தின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், களங்கப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தீா்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் அல்லது திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்யலாம் என்றாா். 

இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியதுடன் வழக்கில் அவரே நீதிபதியாக நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com