
தொடர் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, கோவை மாவட்டம் வால்பாறையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று நீலகிரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் கனமழை காரணமாகவும் மேட்டூர், வைகை உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதாலும் காவிரி கரையோர மாவட்டங்கள், வைகை கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வைகை அணையின் நீா்மட்டம் 70 அடியாக உயா்வு: அணையிலிருந்து உபரிநீா் திறப்பு5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை