மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 26 ஆவது நாள்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது.
காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணைக்கு வியாழக்கிழமை காலை 8 நிலவரப்படி, வினாடிக்கு 1,40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,40,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,17,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”திமுகவிற்கு OPS பலவீனம்தான்!” ஆர்.பி. உதயகுமார் பேட்டி

ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலவீனம், அதிமுகவிற்கு பலம்: ஆர்.பி.உதயகுமார்
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - ரிஷபம்
வீடியோக்கள்
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

