கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சுதந்திர நாள் விழாவில் பங்கேற்று திரும்பிய பள்ளி மாணவி பேருந்து மோதி பலி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பள்ளியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மாநகரப் பேருந்து மோதி பலியானார்.

News image

சுதந்திர நாள் விழாவில் பங்கேற்று திரும்பிய பள்ளி மாணவி பேருந்து மோதி பலி

Updated On :15 ஆகஸ்ட் 2022, 3:45 pm


சென்னை : சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பள்ளியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மாநகரப் பேருந்து மோதி பலியானார்.

குரோம்பேட்டையில் அஸ்தினாபுரம் பகுதியில், பொழிச்சலூர் - அஸ்தினாபுரம் இடையே இயக்கப்படும் 52எச்  என்ற மாநகரப் பேருந்து, சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவி லட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.