திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) காலை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் விரைவு தரிசன டிக்கெட்டுகளை 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி வரும் அக்டோபர் மாதத்துக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் செய்திக்குறிப்பில் ஒன்றில் தெரிவித்துள்ளது.
பிரமோற்சவ நாள்களில் இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் 5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புது தில்லியில் முதல்வர் ஸ்டாலின்.. கேள்வியும் பதிலும்
அக்.1 முதல் 5 நாள்களை தவிர்த்து மற்ற நாள்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


