
கோப்புப்படம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இரண்டாவது நாளாக புதன்கிழமை வினாடிக்கு 18,000 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை 10,000 கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 18,000 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து புதன்கிழமை இரண்டாவது நாளாக 18,000 கன அடியாக நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-இல் பள்ளிகள் செயல்படும்
நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G