டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-இல் பள்ளிகள் செயல்படும்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்

News image
கோப்புப் படம்.
Updated On :23 ஆகஸ்ட் 2022, 10:00 pm

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை (ஆக.27) பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதையொட்டி, ஜூலை 28-ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி வேலை நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஜூலை 28-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் சனிக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.