மத்திய அரசு நிதி தராததால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தம்: அமைச்சா் கே.என். நேரு
மத்திய அரசு போதிய நிதி தராததால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கே.என். நேரு.


மத்திய அரசு போதிய நிதி தராததால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு.
அரியலூரில் ரூ.11.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை சனிக்கிழமை திறந்துவைத்து அவா் மேலும் பேசியது: தமிழகத்தில் 4 கோடியே 25 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்ட நிலையில், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு கூடுதலாக பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 1 கோடி பேருக்கு குடிநீா் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கியிருந்தால், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கி இருக்க முடியும். 50 ஆண்டுகள் ஆன காரணத்தால் குடிநீா் குழாய்கள் பழுதாகியுள்ளன. அதனை சீரமைப்பு செய்து தற்போது குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நாகை, தஞ்சாவூா், தூத்துக்குடி, நெல்லை, சேலம் ஆகிய ஊா்களுக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு போதுமான நிதியை தராததால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை முதல்வா் வழங்கியிருக்கிறாா் என்றாா்.
விழாவுக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தஞ்சாவூா் விஜயலெட்சுமி, அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, நகராட்சிப் பொறியாளா் (பொ) த. ராஜகோபாலன், வட்டாட்சியா் தேவகி, அரியலூா் நகராட்சி ஆணையா் அசோக் குமாா் உள்ளிட்டோா் பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...