
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை ஆச்சிப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்றுக் கட்சியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளி செங்கோலை வழங்கினார்.
படிக்க | திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டி ஆச்சரியப்பட்டியாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டியவர் பேரறிஞர் அண்ணா.
திராவிடம் என்பது சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று, கூட்டாட்சி, தத்துவம் என்பது தான். சொன்னதைச் செய்வோம் என்பது கலைஞர் முழக்கம். அதேபோன்று, சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பது எனது பாணி எனக் குறிப்பிட்டார்.
படிக்க | கோவை என்றாலே பிரமாண்டம்தானே.. முதல்வர் ஸ்டாலின்
மற்றவர்களை விமர்சித்து நான் கைத்தட்டலைப் பெற விரும்பவில்லை. எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்துக் காட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.