
சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம் காவல்நிலையம் அருகே ஜாமினில் வெளியே வந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகே விக்னேஷ் மற்றும் சுரேந்தர் ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் சாலையில் நேற்று இரவு ஓடஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, கொலையாளிகள் 4 பேரும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெளடி தேவேந்திரனை வெட்டிக் கொன்ற வழக்கில் சுரேந்தர், விக்னேஷ், அன்சாரி, சதீஷ், சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க | தொடா்ந்து குறையும் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு
இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த விக்னேஷ் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரையும் பழிவாங்கும் நோக்கில் தேவேந்திரனின் ஆதரவாளர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.