அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட  வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட  வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான புகாரை வேறு அமைப்பிற்கு மாற்றக்கோரி சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்குள் புகுந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் அங்கிருந்த பொருள்களை உடைத்ததாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிய பின் அங்கு சென்று பாா்த்தபோது, சொத்து பத்திரங்கள், கணினிகள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை. இவற்றை ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளா்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தாா். 

அதிமுக அலுவலக கலவர வழக்கை வரும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு நீதிபதி சதிஷ்குமார் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com