10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்

பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்

பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பட்டியலினத்தவா்கள், பழங்குடிகள், பிற்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களைத் தவிா்த்து, பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, முற்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2019-இல் 103-ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, கடந்த நவம்பா் 7-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அப்போது அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம்.திரிவேதி, ஜெ.பி.பா்திவாலா ஆகிய மூவா் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் எனத் தீா்ப்பளித்தனா். 

அதேவேளையில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவா் 10 சதவீத இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது எனத் தீா்ப்பளித்தனா். 

பெரும்பாலான நீதிபதிகள் மேற்கொண்ட முடிவின்படி , 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என கட்சிகள் கூறி வந்த நிலையில், காங்கிரஸைத் தொடர்ந்து தற்போது திமுக சார்பில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com