
காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.
மாண்டஸ் புயலினால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின்பும் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 11) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: “உக்ரைனில் அமைதி நிலவட்டும்”: கண்ணீர் விட்ட போப் பிரான்சிஸ்
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
காஞ்சிபுரத்தில் 111 ஏரிகள் 75 சதவிகிதம் நிரம்பியுள்ளதாகவும், 62 ஏரிகள் 50 சதவிகிதத்துக்கும் மேலாக நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திலும் 220 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.