விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! டிச. 27ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிச. 27 ஆம் தேதி என நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2022, 9:56 am

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிச. 27 ஆம் தேதி என நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகையில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் இருந்து வரும் நிலையில், முக்கியப் பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர்.அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் ஓபிஎஸ், தான் நியமித்த புதிய தலைமைக் கழக நிர்வாகிகளுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நாளை ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். 

இருவரும் போட்டி போட்டுகொண்டு கூட்டம் நடத்துவதால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.