
தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயரும், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் இன்று அடித்துச் சேதப்படுத்தினர்.
தூத்துக்குடியில் நேற்று(டிச.21) பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில், திமுக அமைச்சர் குறித்து சசிகலா புஷ்பா மிரட்டலாக பேசியதாகக் கூறப்படுகிறது.
படிக்க: நயன்தாராவின் ‘கனெக்ட்’ எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.