
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச. 14 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின்னர் படிப்படியாகக் குறைந்து நேற்று(டிச.20) ஒரு சவரன் தங்கம் ரூ. 40,520-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று(டிச. 22, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,992-க்கு விற்பனையாகிறது. இதன் மூலமாக 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,124-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70--க்கு விற்பனை செய்யப்படுகிறது.
படிக்க: மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது