
ஜெயக்குமார்
நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கட்சியில் இருந்து ஓபிஎஸ்ஸை யாரும் நீக்கவில்லை. பொதுக்குழுதான் நீக்கியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.
ஓபிஎஸ் நடத்தியது கட்சிக் கூட்டமே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் எனத் தெரியவில்லை. திமுகவின் 'பி' டீமாகத்தான் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதைத் தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?. ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என்று வேண்டுமானால் அவர் கட்சி தொடங்கட்டும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: அமைச்சர் விளக்கம்