அதிமுக கட்சி கொடி, பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு: ஓபிஎஸ்க்கு அதிமுக தலைமை நோட்டீஸ்!

அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
அதிமுக கட்சி கொடி, பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு: ஓபிஎஸ்க்கு  அதிமுக தலைமை நோட்டீஸ்!


அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஓ.பன்னீா்செல்வம் அழைப்பின் பேரின் அவரின் ஆதரவு மாவட்டச் செயலாளா்கள், மாநில நிா்வாகிகள் கூட்டம் சென்னை வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசியல் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவை சிலா் கபளீகரம் செய்ய முயற்சித்து, தோற்றுப் போய் உள்ளனா். தொண்டா்கள், பொது மக்களின் செல்வாக்கையும் இழக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளனா். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவில் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளா் ஜெயலலிதா என்று தீா்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீா்மானத்தை ரத்து செய்தவா்களை ஒரு நாளும் இந்த நாடு மன்னிக்காது. தனிக் கட்சி தொடங்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டா என்றும், அவ்வாறு தொடங்கினால் அப்போது அவா் பலம் தெரியும் என்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சவால் விடுத்திருந்தார். 

இந்நிலையில், அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாராக திண்டுக்கல் சீனுவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். 

கட்சியின் பொறுப்பு அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் இதுபோன்ற செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் கேட்டு அதிமுக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம்  புதன்கிழமை (டிச.21) கூட்டிய கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் டிச. 27 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com