கிறிஸ்துமஸ் பண்டிகை: கோவை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கோவை டவுன்ஹால்  பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை  நிகழ்வானது நடைபெற்றது.  
கிறிஸ்துமஸ் பண்டிகை: கோவை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கோவை டவுன்ஹால்  பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை  நிகழ்வானது நடைபெற்றது.  

இந் திருப்பலி நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடத்தப்பட்டது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்து, குழந்தை இயேசு உருவபொம்மையை அனைவரிடமும் தூக்கி காட்டி குழந்தை ஏசு பிறப்பை அறிவித்தார். 

பின்னர்,  அதனைக் கொண்டு சென்று குடிலில் வைத்த பின் ஆராதனைகள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்வுகளை மறைமாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ்  நடத்தினார். இந்த சிறப்பு பிராத்தனை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க பிராத்தனை நடத்தப்பட்டதாக ஆயர் தாமஸ்தாமஸ் அக்குவைனஸ் தெரிவித்தார்.

இந்ந ஆண்டு கிறஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக துவங்கி இருப்பதாகவும், பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்ள இருப்பதாகவும், உணவும் பரிமாறிக் கொள்ளவதுடன் அடுத்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று வழிபாடு நடத்த இருப்பதாகவும் தேவாலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு திருப்பலியில் கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வானது நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது. இதேபோல கோவை நகரில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்றது. 

பொதுமக்கள் பாதுகாப்புக்காக  ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com