முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மின் இணைப்புடன் ஆதாா்: கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2022, 3:43 am IST

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருப்பதாலும், 1.39 கோடி போ் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாலும் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனீட்டாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை இரண்டு வழிகளில் இணைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் வழியாகவோ அல்லது மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வழியாகவோ இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் 1.39 கோடி மின் இணைப்புகள் மட்டுமே, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் சனிக்கிழமை மட்டும் 1.43 லட்சம் பேரும், மின்வாரிய இணையதளம் மூலம் 1.16 லட்சம் பேரும் மின் இணைப்பு எண்ணை, ஆதாா் எண்ணுடன் இணைத்துள்ளனா். மொத்தமாக இதுவரை 1.39 கோடி மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றனா்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை டிச. 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளா்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது.

எனவே, இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாள்கள் வரை நீட்டிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.