சீனாவிலிருந்து கோவை வந்தவருக்கு கரோனா!

சீனாவிலிருந்து கோயம்பத்தூர் விமான நிலையம் வந்திறங்கிய மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து கோவை வந்தவருக்கு கரோனா!

சீனாவிலிருந்து கோயம்பத்தூர் விமான நிலையம் வந்திறங்கிய மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவிலிருந்து கோவை விமான நிலையம் வந்தவருக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பைக்குட்டை கிராமம் கருப்பக் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனாவில் கடந்த 13 வருடங்களாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் கடந்த 27ஆம் தேதி, சீனாவில் இருந்து விமான மூலம் சிங்கப்பூர் வந்து, பின்னர் அங்கிருந்து விமானத்தில் கோவை  விமான நிலையத்திலிருந்து வந்தார். அப்போது அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின், சொந்த ஊரான இளம்பிள்ளைக்கு திரும்பினர். 

பரிசோதனை முடிவு இன்று வெளியான நிலையில் ஜவுளி வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து சேலம் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, மகுடஞ்சாவடி சுகாதாரத் துறையினர், கரோனா தொற்று பாதித்த ஜவுளி வியாபாரியை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com