மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதாா்: கால அவகாசம் நீட்டிப்பு.. ஆனால்?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜி
அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

அதேவேளையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்து, இந்த ஒரு மாத காலத்துக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்துவிட வேண்டாம் என்றும், ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், சுமார் 1.61 கோடி போ் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்திருக்கும் நிலையில் கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை அதாவது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனீட்டாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை இரண்டு வழிகளில் இணைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் வழியாகவோ அல்லது மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வழியாகவோ இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் 1.61 கோடி மின் இணைப்புகள் மட்டுமே, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாளை புத்தாண்டு தினம் என்பதால், சிறப்பு முகாம் நடைபெறாது என்றும், மொத்தமாக இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை டிச. 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளா்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது.

எனவே, இதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com