கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது; கடைசியாக கொண்டாடும் நாடு எது?

உலகின் முதல் நாடாக மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி கொண்டாடி வருகிறது. கிரிபாட்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 
கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது; கடைசியாக கொண்டாடும் நாடு எது?
கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது; கடைசியாக கொண்டாடும் நாடு எது?

ஒவ்வொரு நாளும் பிறக்கும் போது, இந்த பூமி அதன் ஆயுளில் ஒரு நாளை இழக்கிறது. ஆனால், ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும் போது உலகமே ஒரு ஆண்டு முடிந்து மற்றொரு ஆண்டு பிறப்பதை மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கொண்டாடி மகிழ்கிறது.

கரோனா, உக்ரைன் மீது போர் என எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், வரும் புத்தாண்டு நல்லதைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடுதான் பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னெடுக்கிறார்கள். வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஆனால் என்ன புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடுவதில்லை. உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்க, புத்தாண்டை உலகின் முதல் நாடாக மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி கொண்டாடி வருகிறது. கிரிபாட்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 

இந்த பூமியின் முதல் நாடு என்று அழைக்கப்படும் கிரிபாட்டி தீவு இந்திய நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி பகல் சுமார் 3.30 மணிக்கெல்லாம் புத்தாண்டு பிறந்து கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டிருக்கிறது. அடுத்து டோங்கா, சமோவா பசிபிக் தீவுகளும் அடுத்தடுத்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டன. 

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நேரத்தில் சூரிய உதயத்தைக் காண்பதால், அதற்கேற்ப நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் முறை 1884ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 

அதன்படி, அமெரிக்காவுக்கு மிக அருகே இருக்கும் பேகர் மீற்றும் ஹௌலாண்ட் தீவுகள்தான், புத்தாண்டை வரவேற்கும் கடைசி நாடுகளாக இருக்கும். இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்குத்தான் அங்கு புத்தாண்டு பிறக்கும்.

கரோலின் தீவும் உலகிலேயே முதலில் சூரிய உதயத்தைக் காணும் நாடாக அறியப்படுகிறது. அந்த வகையில், ஒருவர் கரோலின் தீவில் இருந்து, ஹவாயிலிருக்கும் தனது உறவினருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் ஹவாயில் புத்தாண்டு பிறக்குமாம்.

நியூ ஸிலாந்துக்கு அருகேயிருக்கும் யங் தீவும் கூட, சில சமயங்களில் உலகிலேயே முதல் சூரிய உதயத்தைக் காணும். அந்த வகையில் சில ஜனவரி 1ஆம் தேதிகளும் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com