திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 2 வார்டுகளில் திமுகவினர் போட்டியின்றி தேர்வு

திமுக சார்பில் சுபாஷினி, அதிமுக சார்பில் அல்லி ராணி, பாஜக சார்பில் ராமலட்சுமி, அமமுக சார்பில் ஜெயா உள்பட 9 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

News image

நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 2 வார்டுகளில் திமுகவினர் போட்டியின்றி தேர்வு

Updated On :7 பிப்ரவரி 2022, 12:50 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளில், 2ஆவது வார்டில் போட்டியிடுவதற்கு திமுக சார்பில் சுபாஷினி, அதிமுக சார்பில் அல்லி ராணி, பாஜக சார்பில் ராமலட்சுமி, அமமுக சார்பில் ஜெயா உள்பட 9 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
 
வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு திங்கள்கிழமை(பிப்.7) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2ஆவது வார்டுக்கு போட்டியிட மனு அளித்திருந்த 8 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். 

இதனால், திமுக வேட்பாளர் சுபாஷினி போட்டியின்றி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

13ஆவது வார்டிலும் திமுக வெற்றி
அதேபோல் நிலக்கோட்டை 13ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பெ.சாமுண்டீஸ்வரி, அதிமுக வேட்பாளர் சிவகாமி, சுயேச்சை வேட்பாளராக லதா ஆகிய 3 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில், அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 2 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதை அடுத்து திமுக வேட்பாளர் சாமுண்டீஸ்வரி போட்டியின்றி வெற்றிப் பெற்றார்.

இதனை அடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும், வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.