தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)


தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவசரமாகத் தலையிட வேண்டும்.

இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. கவலைக்குரிய இந்த நடவடிக்கையை பிரதமர் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்ய வேண்டும்.

2018- ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதி செய்ய வேண்டுமென்றும் என்று ஏற்கெனவே மத்திய வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் 28-1-2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com