சட்டப்பேரவையை முடக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை...மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவுக் குரல்

"மாநில அரசின் தலைவராக கருதப்படுபடுபவர் அரசியலமைப்பை நிலைநாட்டுவதில் முன்மாதிரியாக திகழ வேண்டும்"
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு வங்க சட்டப்பேரவை முடக்கி வைத்து, அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். 'ஆளுநரை திரும்ப பெற வேண்டும்' என ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தி வந்த நிலையில், சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்குவங்க சட்டப்பேரவை அமர்வை உயர் பதவியில் உள்ள அம்மாநில ஆளுநர் முடக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இது ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள வழக்கத்திற்கு எதிரானது.

மாநில அரசின் தலைவராக கருதப்படுபடுபவர் அரசியலமைப்பை நிலைநாட்டுவதில் முன்மாதிரியாக திகழ வேண்டும். ஜனநாயகத்தின் அழகே ஒருவருக்கொருவர் மதிப்பு அளிப்பதுதான்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com