தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ஆஜர்

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் முன்பு  இன்று முன்னாள் காவல்துறை தலைவர் ராஜேந்திரன் ( டிஜிபி )நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ஆஜர்
விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் முன்பு  இன்று முன்னாள் காவல்துறை தலைவர் ராஜேந்திரன் ( டிஜிபி )நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 35 கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. இதில் 1042 விசாரணை நடத்தப்பட்டு 1516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் 36வது கட்ட விசாரணைக்காக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

 36வது கட்ட விசாரணை 14ம் தேதி துவங்கி  5 நாள்கள் நடைபெறும் இந்த விசாரணையில் நேற்று தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார்  நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது காவல்துறை இயக்குனராக பணியாற்றிய டி.கே ராஜேந்திரன் இன்று நேரில் ஆஜராகினர்.

 அவர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் விளக்கம் அளித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com