நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள்: தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள்: தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் 295 வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப்பணியில் 1.13 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். கோவைக்கு 3 கம்பெனி போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் மட்டும் 2,528 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரோனா நோயாளிக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 5-6 மணி வரை சான்றிதழ் காட்டி வாக்களிக்கலாம். பணப்பட்டுவாடா குறித்து குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இதுவரை ரூ.8.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 218 பேர் யார் யார் என்பது குறித்து இணையதளத்தில் உள்ளது. 5,960 பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

268 வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com