புதிதாகப் போட்ட தார்ச் சாலையில் புல் முளைக்குமா? 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், அக்கரைகோட்டகம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில், போட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தார் சாலையில் புற்கள் முளைத்திருப்பளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்
புல் முளைத்த சாலை
புல் முளைத்த சாலை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், அக்கரைகோட்டகம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில், போட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தார் சாலையில் புற்கள் முளைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் தனது சுட்டுரைப் பதிவில் ஒரு தார் சாலையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதன் விவரத்தையும் இணைத்துள்ளது.

மிகவும் குறுகிய ஒரு தார்சாலைதான். போட்டது புதிதாகவே இருக்கிறது. அதிலெல்லாம் ஒன்றும் குறையில்லை. ஆனால், தார்சாலையின் பெரும் பகுதியில் புற்கள் முளைத்து, செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து செல்வோருக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு வசதியாகக் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த தார் சாலை போடப்பட்ட விவரம் குறித்த பெயர் பலகையில்,  திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிம், அக்கரைகோட்டகம் ஊராட்சியில், மாநில நிதிக்குழு மானியத்தில், 520 மீட்டரில் இந்தச் சாலை போடப்பட்டுள்ளது.

ஏதோ குறைந்தச் செலவில் போட்டுவிட்டார்கள் என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். சரியாக 16.05 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.. இந்த புல் முளைக்கும் தார்ச் சாலை போட. அதில் ஒப்பந்ததாரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்ததாரரை புதிய டெண்டர் எடுக்காத வகையில் தடை செய்ய வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com