சென்னையில் அடியெடுத்து வைத்த பாஜக; முதல் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். 
உமா ஆனந்தன்
உமா ஆனந்தன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். 

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பா.ஜ.க சார்பில் உமா ஆனந்தன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் சுசீலா கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. சார்பாக அனுராதா ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த நிலையில் இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் 134 வார்டிலும் வாக்குகள் எண்ணப்பட்டன. 

இதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மற்ற வேட்பாளர்களை விடவும் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

உமா ஆனந்தனின் இந்த வெற்றியே சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க. பெற்ற முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com