மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெரும் வெற்றி, திமுக அணி வசம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

News image

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated On :22 பிப்ரவரி 2022, 1:48 pm

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்திலுள்ள சென்னை உள்பட அனைத்து 21 மாநகராட்சிகளிலும்  தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றுக் கைப்பற்றியிருக்கிறது.

மேலும், 138 நகராட்சிகளில் தி.மு.க. 132 நகராட்சிகளிலும் அதிமுக 3 நகராட்சிகளிலும் மற்றவற்றைப் பிற கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

பேரூராட்சிகளிலும் பெரும்பாலானவற்றைத் திமுக அணியினரே கைப்பற்றியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெருமளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்ற கொங்கு மண்டலப் பகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்தப் பகுதிகளிலும் திமுக அணியினரே பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள் கூடி, மாநகர மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள் போன்ற தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.