உக்ரைனில் போர்: தமிழர்கள் உதவிக்கு தொடர்புகொள்ளலாம் - தமிழக அரசு

உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளலாம் என வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளலாம் என வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் 044-28515288, 9600023645, 994025644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.nrtamil.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம் என வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் mm.abdulla@sansad.nic.in என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் விவகாரத்தில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைனில் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் போர் தொடங்கியதால் தரையிறங்காமல் திரும்பி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com