தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் மு.பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவாகும். தமிழக அரசானது மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், ஏற்கெனவே 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் மாணவ சேர்க்கை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
மேலும், வரும் ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரி இல்லாத மயிலாடுதுறை மாவட்டம் உள்பட, எஞ்சிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு படிப்படியாக விதிகளின்படி ஆய்வு மேற்கொள்ள, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் எல்லாம் புதிதாக தொடங்கப்பட்டவைகள்தான். 
அதோடு மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் உள்ளிட்ட இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும்தான் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டி இருக்கிறது. முதல்வர் இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com